புதன், அக்டோபர் 03, 2007



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

கவிதை

வாழ்க்கை

வாழ்க்கை என்பது
ஒரு கடல் அலை
அதன் வண்ணமும்
வடிவமும் ஓயாது
மாறிகொண்டு இருக்கும்
இது இயற்கையின் நியதி


வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

கவிதைப் பூங்கா

அம்மா நீ..!

அம்மா நீ எங்கே அம்மா நீ எங்கே உலகிலே சிறந்ததுஉயிரினும் மேலாலனதுஉன் பாசம்; உன் நேசம்; உன் அன்பு; உன் அரவணைப்புஎல்லாமே தேவையே எனக்கின்றுஅம்மா நீ இன்றுஎவ்வூரில் ஓடுகின்றாய்?கோரப்புயல் போலகொடுமைகள் புரிந்துநிற்கும்கொடியவர் துரத்தினரா?கொண்டதே கோலமாககொடுந்துயர் கொண்டு நீயும்கலங்கியே ஓடினாயோ?கணவனே துணை என்றாய்கடல் கடந்து வந்து விட்டேன்கண்காணா ஊரிலின்றுகண்கலங்கி நிற்கின்றேன்அம்மா உனை என்று காண்பேன்உன் கையால் சோறு உண்ண ஆசைஎன் பிள்ளையை நீ அள்ளிஅணைத்து மகிழ்வதைக்காண ஆசைஆயிரம்பேர் இருந்தென்னஆயிரமாய் பணம் வந்தென்னஆளாக்கி வளர்த்த உன்அன்பு மனம் தவிக்கின்றதேதத்தித் தத்தி நடக்கையிலேதள்ளாடி விழுமென்னைதாவியே ஓடிவந்துதாங்கியே நீ பிடித்தாய்தளர் நடை போட்டு நீதள்ளாடி நடக்கையிலேதள்ளியே நானிருந்துதவிக்கின்ற தவிப்புக்களைஎன்னென்று உரைத்திடுவேன்உனைப் பிரிந்த பின்தானேஉனை எண்ணிப்பார்க்கின்றேன்தாயான பின்தானேதாய்ப்பாசம் உணர்ந்திட்டேன்என்செய்வேன் ஏதுசெய்வேன்என்றேங்கி வாடுகின்றேன்அம்மா நீ எங்கே?

சுட்ட இடம்: t a m i l n a d u t a l k