செவ்வாய், நவம்பர் 28, 2006



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்.

வாழ்கை முழுக்கத் தடைக்கற்கள் இருந்தாலும் "ஜெயிக்க முடியும்". மனசெல்லாம் அதற்கேற்பத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் அதன் அடையளாமாக முயற்சி செய்யும் குணம் உள்ளவராக இருத்தால் போதும்.

காந்திஜி,அன்னை தெரஸா, அப்துல் கலாம், போன்றோர் ஜெயித்ததற்கு அவர்களின் கல்வியறிவுச் செல்வம் போன்றவையா உதவின? ஜெயிக்க முடியும் என்று உறுதியாகச் சிந்தித்து பொறுமையுடன் உழைத்ததால் தான் உயர முடிந்தது..!

அன்னை தெரஸாவின் கனவு நிறைவேற 20 ஆண்டுகள் அனதாம் இவரது 33ஆவது வயதில்தான் இவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்தது. சாப்பிட, தங்க வசதியில்லாத சூழ்நிலையில் கூட கையில் இருந்த 5 ரூபாயில் தன் அன்புப் பணியைத் துவங்கினார்.

அதுவரை பொறுமையாக உழைத்தார் முயற்சி செய்தார். ஜெயிக்க முடியும் என்ற மன உறுதியுடனும், பொறுமையுடனும் இருந்தால் "ஒரு நாள் ஜெயிப்பது நிஜம்".

நன்றி
நிலா


வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

ஓ.. நண்பா..

  • வெற்றி என்பது பெற்று கொள்வது..! தோல்வி என்பது கற்றுக்கொள்வது..!
  • காலம் என்னும் கடலில் கட்டிய கலங்கரை விளக்கங்கள்- புத்தகங்கள்.!
  • காலம் நதியைப் போன்றது உற்பத்தியாகும் இடத்திற்கு திரும்பவே திரும்பாது.!
  • திரை அரங்குகள் சென்று தீயனவற்றை தேடாதே நூலகங்கள் சென்று அறிவை தேடு
  • சிந்தை தெளிவில்லாதவனிடம் செயல் திறனைக் காணமுடியாது
  • திறமை, ஆழ்ந்த சிந்தனையில் உருவாகிறது

நன்றி

நிலா

செவ்வாய், நவம்பர் 07, 2006



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

மொழி


ஆரம்பத்தில் மனிதர்களுக்குள் தகவல் பரிமற்றங்கள் அடையாள ஓவியங்கள், சித்திர குறியீடுகள் போன்றவற்றின் முலம் நிகழ்ந்தன நாளடைவில் வருடங்கள் கடந்து மனிதன் வளர்ச்சியடைகையில் நாகரீக மொழியும் தோன்றியது அவ்வாறு தோன்றிய மொழி ஓவ்வெரரு பிரதேசத்திலும் வெவ்வேறாக இருந்தது.

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா மொழிகளும் இலக்கணம் சுத்தமாக பேசப்படவில்லை. பிறந்த குழந்தை வளர்கையில் எந்த மொழிச் சூழலில் வளர்கிறதோ அந்த மொழியினை அக்குழந்தை அறிந்து கொள்கிறது. தங்களுக்குள் பரஸ்பர உணர்வுகளை வெளிப்படுத்த தோன்றிய மொழி நாளடைவில் எல்லா துறைகளுக்குமான மொழியாக வளர்ச்சியடைந்தது. வர்த்தகத்தில் முதன்மை பெற்றது. மொழிரீதியான தேச எல்லையாகவும் வடிவெடுத்தது.

இன்றி சுமார் 7300 மொழிகள் உலகில் இருப்பதாக கருதப்படுகிறது. அவை அந்தந்த பிராந்திய மக்களால் பேசப்படுபவையாகவும், எழுதப்படுபவையாகவும் அறியப்படுகின்றன மொழி என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல. இலக்கணம், எழுத வேண்டிய விதிமுறைகளை கொண்டுள்ளது. மொழிகளை அறியும் கல்வியினை மொழியியல் என்கிறோம்.

மொழி எப்போது மனிதர்களால் முதலில் பேசப்பட்டது என்பதில் அறிவியலாளர்களுக்குள் ஒத்த முடிவில்லை. இருபது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம். நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேசப்படடிருககலாம். கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் சைகைகள் மூலமாகவும், சித்திரங்கள் ஓவியங்கள் மூலமாகவும் ஒருவரு்கொருவர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று சொல்லப்படுறது.

தமிழ் 3000 ஆண்டுக்கு முந்தையது என்கின்றனர். மிருகங்கள் தங்களுக்குள் பிரத்யேக மொழி மூலமாக பேசிக்கொள்கின்றன. தங்களுக்குள் புரிந்து கொள்கின்றன. மனித மொழிக்கும் மிருகங்களின் மொழிக்கும் வேறுபாடு உண்டு. பழக்கம் காரணமாக சிம்பன்சி, கொரில்லா குரங்குகள் கற்றுக்கொடுத்தால் புரிந்து கொள்கின்றன. அதுபோன்றே வீட்டுப்பிரானிகளும், யானை, கிளி மனிதர்கள் போல உச்சரிக்கும். பழக்கம் காரணமாக சொல்வதைப் புரிந்து கொண்டு நடக்கின்றன.

உலக மொழிகள் குடும்ப மொழியாக ஒரு பிரிவுக்குள் இருந்ததாக, ஒரே மூல மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இந்தோ-ஜரோப்பிய மொழி, ஆசிய ஆப்பிரிக்க மொழி, ஆஸ்திரேலிய மொழி, சைனா-திபெத்திய மொழி எனும் முக்கிய பிரிவுகளுக்குள் உலக மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நாகரீகம் பெற்ற மொழி கவிதையாக, கட்டுரையாக, இசையாக, நாடகமாக, நாட்டியமாக கலை வடிவங்களில் வளர்ந்து மக்கள் நுகர்ந்து ரசித்து இன்பம் கொள்கின்றனர். நாட்டுப்புறப் பாடல்களும், திரைப்படங்களும் இன்றும் ரசிப்பதற்கான அம்சங்களில் முதலிடம் கொள்கின்றன. பல காவியங்களும், காப்பியங்களும் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. ஆக புலன்களால் நுகரப்பட்டு இன்பம் அளிக்கிறது ஒரு மொழி.

உலகில் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு வரலாறு உண்டு. அந்த இனம் பேசிய மொழி, வாழ்ந்த தேசம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் முதலியவை காலத்திற்கு ஏற்ப மாறி வளர்சசி அடைந்திருப்பதைக் காண் முடிகிறது. ஆக தானாகவே ஒவ்வொரு மொழிக்கும் தனியான வரலாறு இருக்கிறது.

மொழியினை சிறப்பாக வளர்ததெடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு கடமையுணர்வுடன் பொக்கிஷமாக சேர்த்து வைக்க வேண்டியது தமிழ் பேசும் மக்களின் தலையாய பணியாகும்.


நன்றி
நிலா