செவ்வாய், ஜனவரி 20, 2009



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

கொலை வெறிக்கு இரையாகும் பாலஸ்தீனமும் - ஈழமும்



ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம் என்றோர் முதுமொழி சொல்ல கேட்டிருப்போம் . அது பாலஸ்தீனருக்கும்- ஈழத்து மக்களுக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதை இன்று உலகம் கண்டு வருகிறது என்றுதான் சொல்லவேண்டும்! கலாங்கலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் தங்கள் தவழ்ந்துத்திரிந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். குழந்தை பெண்கள் என்றும் பாராமல் போர் வெறி கொண்ட இஸ்ரேல் படையினரால் குண்டுகள் வீசப்பட்டு ஆயிரகணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது.

உலகநாடுகள் பலவும் இந்த கொடிய செயலைக் கண்டித்தும் இஸ்ரேல் வான்வழி தாக்குதலையும் தரைவழி தாக்குதலையும் நிறுத்தியதாக இல்லை.

போரை நிறுத்தும்படி ஐக்கிய நாடுகள் சபை கேட்டுகே கொண்ட போதிலும் அதற்கு இஸ்ரேல் செவி சாயித்தாகத் தெரியவில்லை. மேலை நாட்டு வல்லரசுகள் தாங்கள் தயாரிக்கும் அதிநவீன ஆயுதங்களை போர் மேகங்கள் சூழ்ந்த மண்ணில் சோதித்துப் பார்ப்பதிலும் விற்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துகின்றனவேயன்றி உண்மையில் உயிர்களைக் காப்பது அவர்களின் நோக்கமில்லை.

ஈழத்தில் வீறுகொண்டு மண்ணை மீட்க போராடி நிற்கும் புலிகளை சிங்களப்படை தனித்து போராடி வெல்வது பகல் கனவு என்பதை உலகமே அறிந்த ஒன்று. எனவே இந்திய, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவோடு உதவிகளோடும் பயிச்சிகளோடும் தகவல்களோடும் சிங்கள படை இரத்த வெறிகொண்டு மக்களை கொன்று குவிக்கிறது.

இஸ்ரேல் பொலவே ஈழ மக்களை சிங்கள அரசு கொன்று குவிக்கிறது. வரலாற்று ரீதியில் அந்த மண்ணுக்குச் சொந்தமான தமிழ் மக்கள் கொடுமைகளுக்கு இலக்காகி மொழியையும் பண்பாட்டையும் தொலைத்து, அடிமையாக வாழ் வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டதன் விளைவால், உரிமை கேட்டு ஆயுதங்களைத் தூக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஈழத் தமிழர்கள், நாளும் கொல்லபடுகின்ர ஓர் அவலம் தொடர்கதையாகி விட்டது புலிகளை எதிர்த்து போரிடுவதாகக்க பள்ளி மீதும் மருத்துவமனை மீதும் குண்டுமழை பொழிந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது பேச்சுவார்த்தை சமாதானம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே படைபலத்தைப் பெருக்கி போரிடுவதில் இஸ்ரேல் அரசும் இலங்கை அரசும் ஒன்றையொன்று மிஞ்சி நிற்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

வெற்றிய - தோல்விய என்பதல்ல தற்போதைய பிரச்சனை! நியாயமா? அநியாயமா? என்பதுதான் கேள்வி. எது எப்படி இருப்பினும் ஈழ பிரச்சனையால் உலகளாவிய தமிழ்ச்சமுகம் இன்று தாங்கள் எந்த அளவுக்கு உலகத்தில் எள்ளி நகையாடப் படுகிறார்கள். ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து வீறு கொள்ள வைத்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

இஸ்ரேலின் கொடுமையால் பாலஸ்தீன மக்கள் படும் கொடுமைபார்த்து உலக முஸ்லீம் நாடுகள் ஓரணியில் திரண்டுள்ளதுபோல் நம் தமிழ்ச் சமுகமும் ஒன்றுபட (வேண்டும்) உணர இது நல்வாய்ப்பு என உலகார்ந்து அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொற்கோவில் பிரச்சினையில் இந்திர காந்தியை மெய்க்காவலனே சுட்டுகொன்றான். அதை மன்னித்த இந்திய அரசு; படைகளை அனுப்பி புலிகளை நிராயுதபாணிகளாக ஆக்கியதோடு, இளம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையின் விளைவால் அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தி பழி தீர்க்கப்பட்டார்.

ஒரு நாட்டின் பிரதமரையே துப்பாக்கி கட்டையால் அடித்து அவமனத்திய நாட்டுடன் இந்திய அரசு கைகோர்த்து, ஈழமக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டுகொள்ளதிருப்பதோடு, துனைபோகிறதே என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் தீயாய் எரிந்துகொண்டுக்கிறது.

சீக்கிய சமுகத்துக்கு ஒரு தீர்ப்பு, தமிழ் சமுகத்துக்கு ஒரு தீர்ப்பா? இல்லை குண்டடிப்பட்டு இறப்பது தமிழன்தானே என்ற ஏளனமா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் ஈழ தமிழர் படும் அவலத்திற்கு குரல் கொடுப்பது போல் கொடுப்பதும் ஆதிதீவிர ஆதரவாளர்களை சிறை பிடிப்பதும் தமிழக அரசு நடத்திவரும் கபடனாடகமாகும். புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் வழி மாநில ஆட்சிக்கு ஆபத்துவந்து தமது ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்ற அச்சம் ஒருபுறம் புலிகளுக்கு ஆதரவுகாட்டாதிருந்தாள் தமிழ் துரோகி என்ற அவப்பெயர் வந்துவிடுமோ என்ற இருகொள்ளி நிலையில் உள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.

இப்படி ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக் கொள்வதில் தான் கவனமாக இருக்கிர்ரர்களே தவிர மனப்பூர்வமாக குரல் கொடுக்கிறவர்களாக 'பாட்டாளி மக்கள் கட்சி' 'விடுதலை சிறுத்தைகள்' 'தா. பாண்டியன்' 'வைகோ' மற்றும் தமிழ் திரை உலகில் உள்ள தமிழர்களில் சிலர் மட்டுமே




நன்றி
மலேசியா நண்பன்
ஞாயிறு இதழ் (18-01-2009)

நீதித் தாயே..! இன்னும் எவ்வளவு காலம் கண்ணை கட்டிக்கொண்டுஇருக்கபோகிராய்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு