ஞாயிறு, அக்டோபர் 26, 2008



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

தமிழ் சினிமா - திருடர்களின் கூடாரம்!


புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவலைப் படித்தவர்களுக்கு, அதன் உன்மத்துவம் புரியும். அந்த நாவலை பெரும் போராட்டத்திற்குப் பின் திரைப்படமாக உருவாக்கினார் இயக்குனர் திரு.மகேந்திரன். நாவலுக்கும், உதிரிப்பூக்கள் திரைப்படத்திற்குமான இடைவெளி... பல ஆண்டுகள். அப்படி இருந்தும் கூட இயக்குனர் மகேந்திரன், மூலக்கதை 'புதுமைப்பித்தன்' என்று குறிப்பிட்டிருப்பார். இது தான் இயக்குனர் மகேந்திரனின் நேர்மையின் வெளிப்பாடு.
ஆனால் சமீபத்திய தமிழ் சினிமாவில் இந்த நேர்மை வழக்கொழிந்தது போன்ற தோற்றம் உருவாகி வருகிறது. தொழில்நுட்ப ரீதியில் தமிழில் சினிமாவின் தோற்றம் உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் அதே வேளையில், வெகுஜன மக்களின் பார்வைக்கு எட்டாத ஈரான், கொரியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளின் திரைப்படங்களை திருடும் போக்கு தமிழில் அதிகரித்துவருகிறது. அனைத்து வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய ஹோட்டலை நடத்தும் போதும், சமையல் தெரியாமல் மற்ற ஹோட்டல்களிலிருந்து உணவை வாங்கி வந்து வைத்து விற்கும் அவல நிலைக்கு ஒப்பா, தமிழ் சினிமா மாறியுள்ளது. இதுவரை வெளிநாட்டுப் திரைப்படங்களை உல்டா செய்து வெளிவந்த, வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படங்களின் பட்டியல் (என் பார்வையில் சிக்கியவை இவை மட்டும் தான்... பட்டியல் இன்னும் நீள்கிறது.
இந்தப் பட்டியலில் இயக்குனர் மொள்ளமாறி சங்கரின் படங்கள் இடம்பெறவில்லை. காரணம், அவர் படத்தில் கதையே கிடையாது...

பட்டியல் இதோ...

அதே கண்கள் - ரோஷோமான்
நாயகன் - காட் பாதர்
ரோஜா - ஹெல்ட் ஹாஷ்பேஜ்
ஆயுத எழுத்து - அமரோஸ் பெரோ
கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் - சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி
போக்கிரி - டோனி ப்ராஸ்கோ
குஷி - வென் ஹேரி மெட் சாலி
ஜேஜே - செரண்டிபிட்டி
காதலர் தினம் - யூ ஹேவ் காட் மெயில்
நம்மவர் - டூ சார் வித் லவ்
காக்க காக்க - த அன்டச்சபிள்
வெயில், ஆட்டோகிராப் - சினிமா பாரடைசோ
மே மாதம் - ரோமன் ஹாலிடே
குணா - டை மீ அப் டை மீ டவ்ன்
சதிலீலாவதி - ஷீ டெவில்
புதுப்பேட்டை - சிட்டி ஆப் காட்
கஜினி - மெமண்டோ
துரை - கிளாடியேட்டர்
அந்நியன் - செவென்
பட்டியல் - பாங்காக் டேஞ்சரஸ்
வேட்டையாடு,விளையாடு - மர்டர் ஆப் மெமரிஸ்
அஞ்சாதே - மிஸ்டிக் ரிவர்
தாம் தூம் - ரெட் கார்னர்
சரோஜா - ஜட்ஜ்மென்ட் நைட்
வேகம்,நாயகன்(2008) - செல்லுலர்
அலிபாபா - த்ரீ அயர்ன்
அவ்வை சண்முகி - மிஸ்டர் டவ்ட் பயர்
பச்சைக்கிளி முத்துச்சரம் - டிரைல்டு
பொல்லாதவன் - பீஜிங்க் பை சைக்கிள்
நந்தலாலா - கிகிஜிரோ
யோகி - சோட்சி
வாரணம் ஆயிரம் - கிளாசிக்

என்ன நண்பர்களே மூச்சு திணறுகிறதா? சக கலைஞனின் வியர்வையை, ரத்தத்தை, உழைப்பை திருடுவது எவ்வளவு அருவருப்பான விஷயம். ஒரு வாரத்திற்க்கு முன், சன் மியூசிக் தொலைக்காட்சியில் வெங்கட் பிரபு "நாங்கள் சரோஜாவை இங்கிலீஷ் படத்துல இருந்து சுட்டோம்" என்று சிரிக்கிறார்.
வெங்கட் பிரபுவிடம் ஒரு கேள்வி.
சுட்ட(திருடின) படத்துல எதுக்கு சார் 'a film by vengat prabu'னு போடுறிங்க?
இதில் மிஷ்கின், கவுதம் மேனன் போன்றவர்கள் 'காமிரா'வை கண்டுபிடித்தவர்கள் போல ஊடகங்களுக்கு பேட்டி கொடு மகா அயோக்கியத்தனம்.
தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். சில நேரங்களில் திரைத்துறையில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றனர். ஒரு கதைக்காக எழுத்தாளர் பெறும் சம்பளமும் மிகவும் குறைவாகவே உள்ளது. மெக்சிகோ நாட்டின் எழுத்தாளர் மார்க்வெஸின் 'நூற்றாண்டுகாலத் தனிமை' நாவலை திரைப்படமாக்க பல மில்லியன் டாலர் விலை பேசப்பட்டது. இந்த நிலைமையை நம் ஊரில் ஒரு எழுத்தாளர் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
திரைப்பட மேதை பெலினியின் சினிமா பற்றியக் கருத்து:
"உண்மையின் முன்னால் நான் மிகுந்த மகிழ்ச்சியுள்ளவனாகிறேன். சினிமா வாழ்வை பிரதிபலிக்கவில்லை. மாறாக வாழ்வைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகிறது; காட்சிகள் வழியாக அந்த உண்மை நம்மை நெருங்கும் போது நாம் அதன் முன் செயலற்றவர்களாகிப் போகிறோம். நல்ல படைப்பாளன் ஒரு தாவரத்தைப் போல மர்மமாக அதே நேரம் நிமிடத்திற்கு நிமிடம் வளர்ந்து கொண்டும் இருக்கிறான். கலைஞனின் வேலையே மனித ஆன்மாவை விழிப்படையச் செய்வதுதான்..." நேர்மையான கலைஞனின் சத்தியமான வார்த்தையைப் பார்த்தீர்களா?

தகவல்களை அளித்த, திரைப்பட உதவி இயக்குனர் நண்பர் கிருஷ்ணாமூர்த்திக்கு நன்றி

நன்றி
evano oruvan

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு