ஞாயிறு, மார்ச் 09, 2008



வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவை தான் வாழ்வை இனிமையாக மாற்றும்.

தமிழர் !

தமிழர் !

கணவர் ஓர் இனம் !

மனைவி ஓர் இனம் !

மகனும் மகளும்ஓர் இனம் !

ஒரு மனைக்குள்ளேயே பல இனங்கள்!

ஒருமைப்பாடு மருந்துக்குமில்லை!

சங்கத்தில் தலைமைப்பதவி இருக்கும் வரைசங்கம் வளர்த்த தமிழ்என்றுரைப்பான் !

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில்முன்தோன்றி மூத்த தமிழ் என்பான்கல்வியில் முன்னேறிமன்றிலே உட்கார்ந்துதான்தோன்றியாகநடந்துகொள்வான்!

ஒற்றுமை ஒற்றுமையென வாய்கிழிய கதைப்பான்வேற்றுமையில் ஒற்றுமை காண மறுத்துவிடுவான்!

இப்படி ஆளுக்கொருபக்கம் சொல்லொன்று செயல்வேறாகஉலகில்தமிழன் வாழ்ந்தால்

தமிழர் ஒற்றுமை எப்படி மலரும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு